அஜித்தின் 63வது படமாக உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா , சுனில், பிரபு, யோகி பாபு, பிரியா வாரியர், மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகை சிம்ரன் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசரும், ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்துள்ளது. எனவே படத்தை திரையரங்குகளில் கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
எனவே இந்த படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகளும் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் ரசிகர்களின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது பெரிய ஹீரோக்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் போது அவர்களுக்காக மிக உயரமான கட் – அவுட் வைத்து கொண்டாடுவதை ரசிகர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். உயரமான கட்- அவுட்டினால் ஆபத்துகள் நேரும் என்பது தெரிந்தும் பலரும் இதனை இப்போது வரையிலும் பின்பற்றி வருகிறார்கள். இதற்கு அரசு எப்போது தடை விதிக்கப் போகிறது என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
இந்நிலையில் நெல்லை PSS மல்டிபிளக்ஸ் திரையரங்கில் குட் பேட் அக்லி படத்தின் வெளியீட்டை ஒட்டி அஜித் காக 200 அடி உயரத்தில் பிரம்மாண்ட கட் – அவுட் எழுப்ப ரசிகர்கள் முயற்சித்தனர். ஆனால் கட் அவுட்டின் பாரம் தாங்க முடியாமல் திடீரென சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- Advertisement -