Homeசெய்திகள்சினிமாநாளை வெளியாகும் 'குருவாயூர் அம்பலநடையில்'.... புதிய டீசரை வெளியிட்ட படக்குழு!

நாளை வெளியாகும் ‘குருவாயூர் அம்பலநடையில்’…. புதிய டீசரை வெளியிட்ட படக்குழு!

-

பிரித்விராஜ் நடிக்கும் குருவாயூர் அம்பலநடையில் படத்தின் புதிய டீசர் வெளியாகி உள்ளது.நாளை வெளியாகும் 'குருவாயூர் அம்பலநடையில்'.... புதிய டீசரை வெளியிட்ட படக்குழு!

மலையாளத்தில் ஸ்டார் நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் நடிப்பில் கடைசியாக ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து பிரித்விராஜ் குருவாயூர் அம்பலநடையில் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில் பிரித்விராஜுடன் இணைந்து பசில் ஜோசப், யோகி பாபு, அனஸ்வரா ராஜன், நிகிலா விமல், பைஜூ சந்தோஷ், ஜெகதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தை விபின் தாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு அங்கித் மேனன் இசை அமைக்க நீரஜ் ரேவி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரித்விராஜ் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். குறைந்த அளவிலான பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது. கலகலப்புடனும் கொண்டாட்டத்துடன் வெளியான இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது. அதுமட்டுமில்லாமல் ( நாளை) மே 16 அன்று வெளியாக இருக்கும் இந்த படத்தின் புதிய டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மேலும் குருவாயூர் அம்பலநடையில் திரைப்படம் பிரேமலு, மஞ்சும்மெல் பாய்ஸ், ஆவேசம், வருஷங்களுக்கு சேஷம் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த படங்களின் வரிசையில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ