Homeசெய்திகள்சினிமா'தளபதி 69' படத்தின் தயாரிப்பாளர் இவர்தான்!

‘தளபதி 69’ படத்தின் தயாரிப்பாளர் இவர்தான்!

-

நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தை தொடர்ந்து தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். 'தளபதி 69' படத்தின் தயாரிப்பாளர் இவர்தான்!தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தை விநாயகர் சதுர்த்திக்கு வழியாகும் என்று பட குழுவினர் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். இதற்கிடையில் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கி 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அதனால் தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் எனவும் அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து தளபதி 69 படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் கடைசியாக இயக்குனர் எச் வினோத்துக்கு நடிகர் விஜய் கிரீன் சிக்னல் காட்டியதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் தளபதி 69 படத்தை ஆர் ஆர் ஆர் படத்தை தயாரித்திருந்த டிவிவி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. 'தளபதி 69' படத்தின் தயாரிப்பாளர் இவர்தான்!பின்னர் ஒரு சில காரணங்களால் இந்நிறுவனம் தளபதி 69 படத்தில் இருந்து விலகியதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன. அதன் பின் தளபதி 69 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இது குறித்த வேறொரு அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி லியோ படத்தை தயாரித்த லலித் குமார் தான் தளபதி 69 படத்தை தன்னுடைய செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க இருக்கிறாராம். எனவே இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ