நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் வலம் வருகிறார். இவ்வாறு பன்முகத் திறமைகளை கொண்ட நடிகர் தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் என எல்லை தாண்டியும் சாதனை படைத்து வருகிறார். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் தற்போது இட்லி கடை எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகை நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே தனுஷின் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நித்யா மேனன். இவர் இந்த படத்தில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியதால் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் வென்றிருக்கிறார். இந்நிலையில் நித்யா மேனன், தனுஷ் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். ஒரு படத்திற்கோ அல்லது கதாபாத்திரத்திற்கோ தொழில் ரீதியாகவும் ஆக்கபூர்வமாகவும் என்னால் என்ன செய்ய முடியும் என்பதை தனுஷ் மதிக்கிறார். அவர் நேரடியாக அனைத்து விஷயங்களையும் சொல்லக்கூடியவர்.
தனுஷ் சினிமாவில் மிகுந்த கவனம் கொண்டவர். அவர் நல்ல படங்களை, நிறைய படங்களை இயக்க விரும்புகிறார். மூன்று கதைகளுடன் வந்து இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று என்னிடம் கேட்டார் தனுஷ். அதன் பிறகு அந்த கதைகளில் சில மேம்பாடுகளை செய்தார். நாம் நல்ல நடிகர்கள். எனவே மக்களுக்கு நிறைய நல்ல கதைகளை நம்மால் கொடுக்க முடியும் என்று சொல்லக்கூடிய மனிதர் தனுஷ். எதை செய்தாலும் முழு அர்ப்பணிப்புடன் செய்யக் கூடியவர்” என்று தனுஷை பாராட்டி பேசியுள்ளார் நித்யா மேனன்.
- Advertisement -