spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதமிழில் ஹீரோ தெலுங்கில் வில்லன்.... குழப்பத்தை ஏற்படுத்திய சூரியின் கேரக்டர்.... 'மண்டாடி' குறித்து பிரபல நடிகர்...

தமிழில் ஹீரோ தெலுங்கில் வில்லன்…. குழப்பத்தை ஏற்படுத்திய சூரியின் கேரக்டர்…. ‘மண்டாடி’ குறித்து பிரபல நடிகர் விளக்கம்!

-

- Advertisement -

சூரியின் ‘மண்டாடி’ படம் குறித்து பிரபல நடிகர் விளக்கம் கொடுத்துள்ளார்.தமிழில் ஹீரோ தெலுங்கில் வில்லன்.... குழப்பத்தை ஏற்படுத்திய சூரியின் கேரக்டர்.... 'மண்டாடி' குறித்து பிரபல நடிகர் விளக்கம்!

நடிகர் சூரி தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வருகின்ற மே 16ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் மண்டாடி எனும் திரைப்படத்திலும் நடிக்கிறார் சூரி. இந்த படத்தில் சூரியுடன் இணைந்து சுஹாஸ், சத்யராஜ், மகிமா நம்பியார் மற்றும் பலர் நடிக்கின்றனர்.தமிழில் ஹீரோ தெலுங்கில் வில்லன்.... குழப்பத்தை ஏற்படுத்திய சூரியின் கேரக்டர்.... 'மண்டாடி' குறித்து பிரபல நடிகர் விளக்கம்! படகு போட்டி சம்பந்தமான கதைக்களத்தில் இப்படம் உருவாகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் இந்த படத்தின் தெலுங்கு போஸ்டரில் சுஹாஸின் தோற்றம் காட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த பலரும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் மண்டாடி படத்தில் சூரி தமிழில் ஹீரோவாக நடிக்க, சுஹாஸ் வில்லனாக நடிக்கிறார் என்றும், தெலுங்கில் சுஹாஸ் ஹீரோவாக நடிக்க சூரி வில்லனாக நடிக்கிறார் என்றும் பல தகவல்களை பரப்பினர். இது ரசிகர்களுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் சுஹாஸ் இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளார். தமிழில் ஹீரோ தெலுங்கில் வில்லன்.... குழப்பத்தை ஏற்படுத்திய சூரியின் கேரக்டர்.... 'மண்டாடி' குறித்து பிரபல நடிகர் விளக்கம்!அதன்படி அவர், “மண்டாடி படம் குறித்து சிறிய விளக்கம் தர விரும்புகிறேன். தமிழ் மற்றும் தெலுங்கில் இந்த படம் வெளியாகிறது. இப்படம் குறித்து நிறைய வதந்திகள் பரவுகிறது. சூரி அண்ணா இரண்டு மொழிகளிலும் ஹீரோவாக தான் நடிக்கிறார். நான் வில்லனாக நடிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் மண்டாடி படத்தில் சூரியின் கதாபாத்திரம் குறித்து பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

MUST READ