கடந்த சில தினங்களுக்கு முன்னர் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன், தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்று கூறியிருந்தார். கமல்ஹாசனின் இந்த கருத்து கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து கர்நாடகாவின் பல்வேறு அரசியல் தலைவர்கள், மொழி ஆர்வலர்கள் ஆகியோர் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதாவது கமல்ஹாசனின் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக வேண்டும் என்றால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் கமல்ஹாசன், தவறு செய்தால் மட்டுமே மன்னிப்பு கேட்க முடியும். தவறு செய்யாமல் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
இதனை அடுத்து தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் எந்தவித இடையூறும் இல்லாமல் திரையிட அனுமதிக்குமாறு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனு என்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாக பிரசன்னா, “கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கமல்ஹாசன் பேசியுள்ளார். எந்த மொழியும் மற்றும் மொழியிலிருந்து பிறந்தது இல்லை. கன்னட மொழி குறித்து பேசுவதற்கு கமல் என்ன வரலாற்று ஆய்வாளரா? மொழி ஆய்வாளரா? அவர் மொழியை சிறுமைப்படுத்தி விட்டு வணிக நோக்கத்திற்காக தற்போது நீதிமன்றம் வந்திருக்கிறார்.
மன்னிப்பு கேட்டால் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும். அவரால் ஏற்பட்ட பிரச்சனை தான் இது. கர்நாடகாவில் பல கோடிகளை சம்பாதிக்க வேண்டும் என்றால் மன்னிப்பு கேட்பதை தவிர வேறு வழி இல்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் பிற்பகல் 2.30 மணிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு கமல் என்ன முடிவு எடுக்கப் போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மன்னிப்பு கேட்டால் தான் கோடிகளை சம்பாதிக்க முடியும்…. கமல்ஹாசனுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கெடு!
-
- Advertisement -