விஷாலின் உடல்நலம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் கடைசியாக மதகஜராஜா திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து விஷால், ரவி அரசு இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தான் சமீபத்தில் விழுப்புரத்தில், திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது விஷால் மேடையில் திடீரென மயங்கி விழுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து விஷாலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏற்கனவே நடிகர் விஷால், மதகஜராஜா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது, வைரல் காய்ச்சல் காரணமாக அவருடைய கை நடுங்கியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் விஷால் மேடையில் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது நடிகர் விஷால் நிகழ்ச்சிக்கு வரும் சமயத்தில் வழக்கமான உணவை எடுத்துக் கொள்ளாமல் வெறும் ஜூஸ் மட்டும் குடித்ததனால் தான் சக்தி குறைந்து மயக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக கவலைக்கிடமான விஷயம் எதுவும் இல்லை என்றும், விஷால் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அது மட்டுமில்லாமல் இனிவரும் நாட்களில் விஷால் உணவு நேரத்தை முறையாக பராமரிக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்றும் புதிய தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த தகவல் விஷால் ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளது.