- Advertisement -
அதிக பார்வைகளை பெற்ற மலையாள பாடல் என்ற சாதனையை தர்ஷனா பாடல் உருவாக்கியுள்ளது.

வினீத் சீனிவாசன் இயக்கத்தில் பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன், தர்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹிருதயம் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இந்த காதல் திரைப்படம் மலையாளம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இந்தப் படத்தின் அனைத்து பாடல்கள் மற்றும் இசை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.குறிப்பாக தர்ஷனா பாடல். இந்தப் படத்திற்கு ஹேஸம் அப்துல் வஹாப் இசையமைத்திருந்தார்.
இந்நிலையில் தர்ஷனா பாடல் மலையாளத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற சாதனையை தற்போது உருவாக்கியுள்ளது. இதைப் படக் குழுவினர் பெருமையுடன் பகிர்ந்துள்ளனர். தர்ஷனா பாடல் 100 மில்லியனுக்கும் மேல் பார்வைகளைப் பெற்றுள்ளது.