spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவருடத்திற்கு 4 படங்களில் நடிக்கப் போகிறேன்..... டாப் ஸ்டார் பிரசாந்தின் மாஸ்டர் பிளான்!

வருடத்திற்கு 4 படங்களில் நடிக்கப் போகிறேன்….. டாப் ஸ்டார் பிரசாந்தின் மாஸ்டர் பிளான்!

-

- Advertisement -

நடிகர் பிரசாந்த் 1990 காலகட்டங்களில் இருந்தே தனது திரை பயணத்தை தொடங்கியவர். வருடத்திற்கு 4 படங்களில் நடிக்கப் போகிறேன்..... டாப் ஸ்டார் பிரசாந்தின் மாஸ்டர் பிளான்!இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து பெயர் பெற்றார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இவர் லேடி கெட்டப்பிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவரது நடிப்பில் வெளியான ஜீன்ஸ், ஜோடி, ஸ்டார், சாக்லேட் போன்ற படங்கள் இன்று வரையிலும் ரசிகர்களின் பேவரைட் படங்களாக இருக்கிறது. இருப்பினும் சிறிய இடைவெளிக்கு பிறகு இவரது நடிப்பில் உருவாகி இருந்தால் அந்தகன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பட்டைய கிளப்பி வருகிறது. இந்த படம் பாலிவுட்டில் வெளியான அந்தாதுன் படத்தின் ரீமேக் ஆகும். இதில் பிரசாந்துடன் இணைந்து சிம்ரன், கார்த்திக், சமுத்திரக்கனி, கே எஸ் ரவிக்குமார், யோகி பாபு, உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.வருடத்திற்கு 4 படங்களில் நடிக்கப் போகிறேன்..... டாப் ஸ்டார் பிரசாந்தின் மாஸ்டர் பிளான்! அடுத்ததாக பிரசாந்த், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 5 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரசாந்த் ஓராண்டுக்கு நான்கு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். அதேசமயம் இந்த இயக்குனர், அந்த இயக்குனர் என்றில்லாமல் அனைத்து இயக்குனர்களிடமும் கதை கேட்டு அவர்களிடம் பணியாற்ற விரும்புவதாக தெரிவித்திருக்கிறார் பிரசாந்த். எனவே அந்தகன் படத்தை தொடர்ந்து நடிகர் பிரசாந்த், மற்றுமொரு படத்தில் சோலோவாக களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ