நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் கடைசியாக தலைவன் தலைவி திரைப்படம் வெளியானது.
அடுத்தது ட்ரெயின் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் இவர், பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். அதே சமயம் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். சில கமிட்மெண்ட்கள் காரணமாக கமல்ஹாசன் அதிலிருந்து விலகி விட்டதால் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த சீசனையும் இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் போது விஜய் சேதுபதி பேசிய ஒரு விஷயம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதன்படி அவர், “இந்த விளையாட்டில் நிறைய பேர் கடனை அடைக்கும் அளவிற்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக சொல்கிறார்கள்.
நான் ஆயிரத்தில் சம்பாதிக்கும் போது அதற்கேற்ப கடன் இருந்தது. லட்சத்தில் சம்பாதிக்கும் போது அதற்கேற்ப கடன் இருந்தது. இப்போது கோடியில் சம்பாதிக்கிறேன். ஆனாலும் எனக்கு கடன் பிரச்சனை இருக்கிறது. அதனால் அதனுடனே நான் வாழ கற்றுக் கொண்டேன். வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்வதுதான் சவால்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -


