spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஉங்கள் பிரார்த்தனைகளால் திரும்பி வருவேன் விஜய் டிவி நடிகர் பதிவு வைரல்...

உங்கள் பிரார்த்தனைகளால் திரும்பி வருவேன் விஜய் டிவி நடிகர் பதிவு வைரல்…

-

- Advertisement -

விஜய் டிவியின் பிரபல சீரியல் நடிகர் சபரிநாதன் சமீபத்தில் விபத்தில் சிக்கி, அறுவை சிகிச்சை செய்துள்ளாா். தற்போது மருத்துவமனையில் இருந்து தனது உடல்நிலை குறித்து புகைப்படங்களை வெளியிட்டதுடன் உங்கள் பிரார்த்தனைகளால் திரும்பி வருவேன் என்ற பதிவு இணையதளத்தில் வைரலாகி உள்ளது.உங்கள் பிரார்த்தனைகளால் திரும்பி வருவேன் விஜய் டிவி நடிகர் பதிவு வைரல்...

சின்னத்திரையில் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்புள்ளது. தற்போது சீரியல்களில் நடித்து வரும் நடிகர் நடிகைகள், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கின்றனர். இவர்களுக்கான ஃபாலோயர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இணையதளங்களில் அவர்களை தொடர்பு கொள்கின்றனர். அந்த வகையில் இணையதளங்கள் மூலம் பிரபலமான விஜய் டிவி சீரியல்களில் நடித்த சபரி நாதன் மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளாா்.

we-r-hiring

இவர், பொன்னி, வேலைக்காரன், பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். சமீபத்தில் முடிவுக்கு வந்த விஜய் டிவியின் பொன்னி சீரியலில் நாயகனாகவும் நடிகை வைஷ்ணவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும், இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை ரோஸ்ட் செய்யும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி பிரபலமானார்.

உங்கள் பிரார்த்தனைகளால் திரும்பி வருவேன் விஜய் டிவி நடிகர் பதிவு வைரல்...

தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கெஸ்ட் மற்றும் தொகுப்பாளராக என்ட்ரி கொடுத்து வரும் சபரி நாதன், சமூகவலைதளங்களிலும் ஆக்டீவாக இருப்பாா். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகும்.
இந்நிலையில் தற்போது அவர், நான் நலமாக உள்ளேன், விரைவில் திரும்பி வருவேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சில நாட்களுக்கு முன்பு ஒரு விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன், ஒரு தட்டு பொருத்தப்பட்டுள்ளது. மன்னிக்கவும், இப்போதைக்கு செய்திகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது. உங்கள் பிரார்த்தனைகள் எனக்கு தேவை, என்று பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில, சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா உள்ளிட்ட பலரும் ‘கெட் வெல் சூன்’ என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக காலமானார்…

MUST READ