spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக காலமானார்…

கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக காலமானார்…

-

- Advertisement -

பழம்பெரும் நடிகையான கொல்லங்குடி கருப்பாயி இன்று காலமானார். அவருக்கு வயது 99.  நாட்டுப்புற பாடகியான இவா் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ள கருப்பாயி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவர் உடல் சிவகங்கையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக காலமானாா்…

1985 ஆம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியான ஆண்பாவம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான கொல்லங்குடி கருப்பாயி. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாகவே, மண்வளம் கமழும் நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமானவா் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவிலும் பல்வேறு நாட்டுப்புற பாடல்களை பாடியதோடு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண் இசை பாடல்களையும் பாடியுள்ளாா்.

we-r-hiring

சிவகங்கை மாவட்டம், மதுரை-தொண்டி சாலையில் உள்ள கொல்லங்குடி கிராமத்தை சோ்ந்தவா். சினிமாவில் நடிப்பதற்கும், பாடுவதற்கும் வாய்ப்பு குறைந்ததால், திருவிழாக்களில் நாட்டுப்புற பாடல்களை பாடி வந்துள்ளாா். வயதானதால் வாய்ப்புகள் குறைந்துவிடவே தினமும் வாழ்க்கையை நடத்த முடியாமல் கஷ்டத்துடன், வறுமையின் பிடியில் தவித்து வந்திருக்கிறாா். இவா் நலிந்த கலைஞர்களுக்கு நடிகர் சங்கம் அளிக்கும் மாதாந்திர தொகையை மட்டுமே வைத்து தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளாா்.கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக காலமானாா்…மேலும், சம்பளம் கொடுத்தவா்களைவிட என்னை ஏமாா்த்தியனவா்கள் தான் அதிகம். எனக்குப் பிள்ளை இல்லை என்ற குறையைப் போக்கி தலைமகனாக தற்பொழுதும் நடிகர் பாண்டியராஜன் தான் உள்ளாா். நான் சென்னைக்கு போனால், என்னைப் பார்க்காமல் இருக்கமாட்டாா். நான் சினிமாவில் நடிக்கும்போது என்னையை யாரும் நடிகர் சங்கத்தில் சேர்க்கவில்லை. பேரன் விஷால் தான் என்னை உறுப்பினராக்கி அடையாள அட்டை கொடுத்தாா் என்று என 2018-ம் ஆண்டு விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்திருந்தார்.கொல்லங்குடி கருப்பாயி வயது மூப்பு காரணமாக காலமானாா்…ஆண்பாவம் படத்தில் வி.கே.ராமசாமிக்கு அம்மாவாகவும் பாண்டியராஜனுக்கு பாட்டியாக நடித்திருந்தார். அவர் நடித்த அந்த கதாபாத்திம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமானது. அதை தொடர்ந்து, கோபாலா கோபாலா, ஆயிசு நூறு, கபடி கபடி, ஆண்களை நம்பாதே, போன்ற பல படங்களில் நடித்துள்ளாா். 1993-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த ஜெயலலிதா கரங்களால் கலைமாமணி விருது பெற்றார்.

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக இன்று காலமானாா். இதனால் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து.. முன்பே கணித்த ஜோதிடர்கள்! பலித்தது எப்படி?

MUST READ