இட்லி கடை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
தனுஷின் நடிப்பிலும் இயக்கத்திலும் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் தான் இட்லி கடை. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இயக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் தனுஷ் உடன் இணைந்து அருண் விஜய், நித்யா மேனன், ராஜ்கிரண், சத்யராஜ், சமுத்திரகனி, பார்த்திபன், ஷாலினி பாண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ‘ராயன்’ படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கி, நடிக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி அடுத்தடுத்த போஸ்டர்களும், பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வந்தன. இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் நடைபெறுகிறது. அதே வேளையில் இப்படத்தின் டிரைலரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே வெளியான போஸ்டரில் பார்த்தது போல் தனுஷ் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். அதாவது கிராமப்புறத்தில் இட்லி வியாபாரம் செய்பவராகவும், நகர்ப்புறத்தில் தொழிலதிபராகவும் காட்டப்பட்டிருக்கிறார். அருண் விஜய் நெகட்டிவ் ஷேடட் ரோலில் நடித்துள்ளார். தனுஷுக்கும், அருண் விஜய்க்கும் இடையேயான மோதல் காட்சி ட்ரெய்லரில் காட்டப்பட்டுள்ளது. இரண்டு நிமிட ட்ரெய்லரிலேயே காதல், எமோஷன், காமெடி, ஆக்சன் என அனைத்தையும் காட்டிவிட்டனர். இதுவரை இந்த படமானது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது ஒரு நல்ல பீல் குட் எமோஷனல் படமாக இட்லி கடை படம் உருவாகி இருப்பது கொண்டாட்டத்தை தந்திருக்கிறது. எனவே வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி இந்த படம் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ட்ரெய்லரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.