Homeசெய்திகள்சினிமாநெட்பிளிக்ஸில் வெளியாகும் 'இந்தியன் 3' ...... எப்போது?

நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‘இந்தியன் 3’ …… எப்போது?

-

- Advertisement -

கமல்ஹாசன் மற்றும் சங்கர் கூட்டணியில் கடந்த 1996 ஆம் ஆண்டு இந்தியன் எனும் திரைப்படம் வெளியானது. ஊழலுக்கு எதிரான கதைக்களத்தில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.நெட்பிளிக்ஸில் வெளியாகும் 'இந்தியன் 3' ...... எப்போது? இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் அப்பா – மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். லஞ்சம் வாங்கியதால் தன் மகனையே கொல்லும் நேர்மையான இந்தியனாக நடித்திருந்தார் கமல். இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வந்தது. அதன்படி இந்தியன் 2 என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்த இதன் இரண்டாம் பாகம் கடந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புகளுடன் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்தது இந்தியன் 2. பிரம்மாண்டத்தை மட்டுமே நம்பி திரைக்கதையில் கோட்டை விட்டிருந்தார் சங்கர். எனவே எதிர்மறையான விமர்சனங்களை பெற்ற இந்தியன் 2 திரைப்படம் வசூலிலும் சறுக்குகளை சந்தித்தது. இருப்பினும் இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. நெட்பிளிக்ஸில் வெளியாகும் 'இந்தியன் 3' ...... எப்போது?ஆகையினால் இந்தியன் 2 படத்தை விட இந்தியன் 3 படம் வெற்றி பெறும் என்று படக் குழுவினர்களும் மிகுந்த நம்பிக்கையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் தான் சமீபத்தில் இந்தியன் 3 திரைப்படமானது நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. அதன்படி இந்தியன் 3 படமானது 2025 ஜனவரி மாதத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ