Homeசெய்திகள்சினிமாஜெயம் ரவி, நயன்தாரா கூட்டணியில் உருவாகியுள்ள 'இறைவன்' .... ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

ஜெயம் ரவி, நயன்தாரா கூட்டணியில் உருவாகியுள்ள ‘இறைவன்’ …. ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்!

-

இறைவன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ஜெயம் ரவி, நயன்தாரா கூட்டணியில் இறைவன் திரைப்படம் உருவாகியுள்ளது.இந்த படத்தை மனிதன், வாமனன், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐ அகமது இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் யுவன் சங்கர் ராஜா இசையிலும் இப்படம் உருவாகி உள்ளது. நரேன், ராகுல் போஸ், விஜயலக்ஷ்மி, ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் சைக்கோ திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ளது. சில மாதங்களுக்கு முன்பே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது.
அதைத்தொடர்ந்து படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ‘அழகாய்’ எனும் முதல் பாடல் நாளை வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ