ஜெயம் ரவி, நயன்தாரா, யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் இறைவன் திரைப்படம் உருவாகியுள்ளது.இந்த படத்தை மனிதன், வாமனன், என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய ஐ அகமது இயக்கியுள்ளார். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் . நரேன், ராகுல் போஸ், விஜயலக்ஷ்மி, ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்டோர் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் சைக்கோ திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ளது.
சமீபத்தில் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது. ஒரு கொடூரமான சைக்கோ திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது என்பதை ட்ரெய்லரிலேயே தெரிகிறது .
Enjoy #Azhagai from #Iraivan ❤️✨https://t.co/MzBnQVe30i@actor_jayamravi #Nayanthara @Ahmed_filmmaker @thisisysr @PassionStudios_ @eforeditor @jacki_art @Dophari @Synccinema @MangoPostIndia @gopiprasannaa @JungleeMusicSTH @SureshChandraa @Donechannel1 pic.twitter.com/rS6xv54H5w
— Jayam Ravi (@actor_jayamravi) September 8, 2023
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக “அழகாய்”எனும் பாடல் வெளியாகி உள்ளது. சஞ்சித் ஹெக்டே, கரிஷ்மா, யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். பாடலாசிரியர் விவேக் இப்பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். மெலோடி பாடலாக ஒரு வகை இருக்கும் இப்பாடல் யூடியூபில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.