கடந்த 2006 ஆம் ஆண்டு சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சில்லுனு ஒரு காதல். இந்த படத்தை ஒபேலி N கிருஷ்ணா இயக்கியிருந்தார்.
இந்த படம் இன்று வரையிலும் பலரின் ஃபேவரைட் படங்களில் ஒன்றாக இருக்கிறது. நடிகர் சூர்யா இந்த படத்தில் சாக்லேட் பாய் கணவராகவும் ரக்கெட் பாய் லவ்வராகவும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அந்த வகையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ஒபேலி N கிருஷ்ணா, சிம்பு நடிப்பில் 10 தல திரைப்படத்தையும் இயக்கி வெற்றி பெற்றார். அடுத்ததாக ஒபேலி N கிருஷ்ணா, புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.
இந்த படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி ஒபேலி N கிருஷ்ணா இயக்க இருக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது ஒபேலி N கிருஷ்ணா, சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறாராம்.
இதில் நடிகர் கவினை ஹீரோவாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகை குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -


