spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா?

ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா?

-

- Advertisement -

ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா?

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். இவருடைய இயக்கத்தில் வெளியான தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. இருப்பினும் இவர் இயக்கிய தர்பார், சிக்கந்தர் போன்ற படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது இவர், சிவகார்த்திகேயனை வைத்து ‘மதராஸி’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சரிவை சந்தித்துள்ளது. இருப்பினும் உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூலை கடந்துள்ளதாக படக்குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம் குறித்த அப்டேட் கிடைத்திருக்கிறது.ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படத்தில் இவர்தான் ஹீரோவா? அதாவது ஏ.ஆர். முருகதாஸ் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் பேச்சு அடிபடுகிறது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

we-r-hiring

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ