spot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகத்ரினா கைஃப்-அ விவாகரத்து செய்யப்போறேனா😲... கேள்வியால் பதறிப் போன விக்கி கௌஷல்!

கத்ரினா கைஃப்-அ விவாகரத்து செய்யப்போறேனா😲… கேள்வியால் பதறிப் போன விக்கி கௌஷல்!

-

- Advertisement -

விவாகரத்து செய்ய இருப்பதாக வெளியான கேள்விகளுக்கு விக்கி கௌஷல் பதில் அளித்துள்ளார்.

பாலிவுட் நடிகர்கள் விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் இருவரும் திருமணமாகி தங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவித்து வருகின்றனர்.

we-r-hiring

சினிமா பிரபலங்கள் என்றாலே வதந்திகளை சந்தித்து தானே ஆகவேண்டும். அந்த வகையில் விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் பிரிந்து செல்வதாக வதந்திகள் பல வெளிவந்தன. இது அவர்களின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியது.

விக்கி கௌஷலிடம் இந்த விவாகரத்து வதந்திகள் குறித்து கேட்டபோது, அவர் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார். “நம் நாட்டில் திருமணம் என்பது வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். வேறு சிறந்த நடிகை கிடைத்தால் கத்ரீனா கைப்பை விவாகரத்து செய்வது நியாயம் என்று நினைக்கிறீர்களா?

என்ன பேசுறீங்க. நான் இந்த நிகழ்ச்சி முடிச்சிட்டு வீட்டுக்கு போகணும். இப்படி ட்விஸ்ட்ஆ கேள்வி கேட்டு கோர்த்து விடக்கூடாது. நான் இன்னும் குழந்தைதான்; முதலில் என்னை வளர விடுங்கள். இவ்வளவு ஆபத்தான கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்வது?” என்று பதில் அளித்துள்ளார்.

அவர் வதந்திகளை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதையும், இரண்டாவது திருமணம் பற்றிய யோசனையை மகிழ்விக்க விரும்பவில்லை என்பதையும் இது நகைச்சுவையாக தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

MUST READ