Homeசெய்திகள்சினிமாஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் 'அமரன்'?

ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் ‘அமரன்’?

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21 வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் 'அமரன்'?இந்த படத்தை கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ரங்கூன் திரைப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கிறார். மேலும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சி ஹெச் சாய் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் 'அமரன்'?இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். படமானது மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. எனவே சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் போன்ற பகுதியில் முடிவடைந்த நிலையில் படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி ரசிகர்கள் பலரும் படமானது எப்போது ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகிறதா சிவகார்த்திகேயனின் 'அமரன்'?ஏற்கனவே வெளியான தகவலின் படி அமரன் திரைப்படம் 2024 செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படமானது அக்டோபர் 10ஆம் தேதி ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகும் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ராஜ்கமல் நிறுவனமும் (ஜூலை 17) இன்று மாலை 5 மணி அளவில் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட உள்ளது. அது அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சூர்யாவின் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10-ல் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே நாளில் அமரன் திரைப்படமும் வெளியாகுமா? என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

MUST READ