ரகுமான் வெளியூருக்கு சென்றால் சபேஷ் முரளி தான் அந்த வேலையை செய்வார்கள் இயக்குனர் பாக்யராஜ் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்துள்ளாா்.
மறைந்த இசையமைப்பாளர் சபேஷ் உடலுக்கு இயக்குனர் பாக்யராஜ் அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் , ”நல்ல மனிதர்களும் திறமைசாலிகளும் நம்மை விட்டு பிரியும் போது மனதிற்கு கஷ்டமாக இருக்கும் என்றும் சபேஷ் மிகவும் அமைதியான மனிதர் என்றும் தன்னுடைய படங்களில் வேலை செய்திருந்தாலும் பெரிதும் பேச மாட்டார் என்றார். தேவாவும் அவரது சகோதரர்களின் ஒற்றுமை என்பது அனைவரின் மனதிலும் மிகவும் நெகிழ்வான ஒன்றாக இருக்கும் எனவும், ஏ ஆர் ரகுமான் வெளியூர்களுக்கு செல்லும் பொழுது அந்த வேலையை சபேஷ் முரளி இடம் தான் கொடுப்பார்கள். அந்த அளவிற்கு அவர்கள் திறமைசாலிகள் என்றார். எல்லோருக்கும் வருவது போல அவருக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டது“ மேலும் அவரது மறைவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்தார்.
இசைக்கலைஞர் சங்கத்தை கட்டி முடிக்க ஆசைப்பட்டாா் சபேஷ் – கே எஸ் ரவிக்குமார் உருக்கம்



