ரஜினியின் ஜெயிலர் படத்தின் இரண்டாம் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், சிவராஜ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். அனிருத் இதற்கு இசை அமைத்துள்ளார். ரஜினி படத்தில் முத்துவேல் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெயிலராக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து தற்போது தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் காவாலா எனும் பாடல் வெளியாகி சூப்பர் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. தமன்னாவின் துள்ளலான நடனத்தில் உருவாகியுள்ள இந்த பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும் இப்பாடலை அருண் ராஜா காமராஜ் எழுதியுள்ள நிலையில் சில்பா ராவ் பாடியுள்ளார்.
தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் இரண்டாம் சிங்கிள் குறித்த அப்டேட் நாளை (ஜூலை 13 )மாலை 6 மணி அளவில் வெளியாகும் என்று பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்ட அறிவித்துள்ளனர்.