ஜேசன் சஞ்சய் ,படம் இயக்குவதில் லைகா நிறுவனம் தனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பொதுவாக இப்படியான நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவில் நடிகர்களாகவே களமிறங்குவர். ஆனால் இதற்கு மாறாக விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்கியுள்ளார்.
இதற்கு முன்னர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், ஜேசனை கதாநாயகனாக வைத்து ஒரு கதை கூறியுள்ளார். அந்தக் கதை நன்றாக இருக்கிறது, அதில் நடிக்கலாம் என்று விஜயும் பரிந்துரை செய்துள்ளார். ஆனால் ஜேசன், தான் இயக்குனர் தான் ஆவேன் என்று உறுதியாக கூறிவிட்டாராம்.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்கனராக அறிமுகமாகும் முதல் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
தற்போது இந்தப் படம் குறித்து பேசியுள்ள ஜேசன் “லைகா நிறுவனத்திற்கு என்னுடைய கதை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. படத்தை இயக்குவதில் லைகா எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளனர். திரைத்துறையில் வளர்ந்து வரும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் பேசி வருகிறோம். “ என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் என் இஷ்டம் தான், லைகா எனக்கு முழு சுதந்திரம் கொடுத்துருக்காங்க… ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி!
-
- Advertisement -