Homeசெய்திகள்சினிமாவாகை சூடினாரா 'ஜவான்'.... திரை விமர்சனம்!

வாகை சூடினாரா ‘ஜவான்’…. திரை விமர்சனம்!

-

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் அடுத்தடுத்து நான்கு மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர்களால்  முக்கிய இடம் பிடித்த இயக்குனர் தான் அட்லி. இவருடைய 5வது படமான ஜவான் திரையரங்குகளில் கோலாகலமாக நேற்று
வெளியாகியுள்ளது. படத்தைப் பற்றிய ரிவ்யூ இதோ. ஏற்கனவே அனைவரும் அறிந்தது போல படத்தில் தந்தை மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் ஷாருக்கான். பிளாஷ்பேக்கில் வரும் தந்தை ஷாருக்கான் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் போது தேச துரோகி என முத்திரை குத்தப்படுகிறார், சிறைச்சாலையிலேயே பிறந்து வளர்ந்து அங்கேயே ஜெயிலராகும் மகன் ஷாருக்கான் என இரு கதாபாத்திரங்களையும் நன்கு வித்தியாசம் தெரியும்படி பெர்ஃபாமன்ஸில் மிரட்டி இருக்கிறார் ஷாருக். இதனைத் தொடர்ந்து இவர்கள் என்ன செய்கிறார்கள், அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் இவையே படத்தின் பின்னணி. வழக்கமான பழி வாங்கும் கதை போலவே இப்படத்தின் கதையும் அமைக்கப்பட்டுள்ளது. தந்தை மகன் இரு ஷாருக்கான்களுக்கும் சரிசமமான வெயிட்டேஜ் உடன் திரைக்கதை நகர்கிறது. வழக்கமாக வரும் அட்லி படங்களை பெண்கள் கதாபாத்திரங்கள் மிக வலிமையானதாக இருக்கும். அதேபோலவே இப்படத்தில் வரும் நாயகி ஆன நயன்தாரா, தீபிகா படுகோன், மற்றும் ஷாருக் கான் கேங்கில் வரும் ஆறு பெண்களுக்கும் தனித்தனியே பெயர் சொல்லும் படியான காட்சி அமைப்புகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்கிறார்.

வில்லனாக வரும் விஜய் சேதுபதி தன்னுடைய கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் படியான ஒரு நடிப்பை கொடுத்துள்ளார். அவருடைய வயதான தோற்றத்தில் மேக்கப் இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது. இவை அனைத்தையும் அசால்டாக தட்டி தூக்குகின்றன அனிருத்தின் இசையும், ஜி கே விஷ்ணுவின் ஒளிப்பதிவும். ஆக்ஷன் காட்சிகளை மிக பிரம்மாண்டமாகவும் நேர்த்தியாகவும் படம் பிடித்துள்ளனர். காட்சியின் உணர்வுகளை நமக்கு கடத்தி காட்சிகளை அடுத்த தளத்திற்கு எடுத்து செல்கிறது அனிருத்தின் பின்னணி இசை. விறுவிறுப்பான முதல் பாதி, மிக நீண்ட ஃப்ளாஷ் பேக்கினால் கொஞ்சம் ஸ்லோவாக காட்சியளிக்கும் இரண்டாம் பாதி என திரைக்கதை நகர்ந்தாலும், இடைவேளை காட்சி மற்றும் கிளைமாக்ஸ் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

ஒரு பாலிவுட் படமாக இருந்தாலும் பெருமளவு தமிழ் நடிகர்கள் நடித்துள்ளனர். அவர்களுக்கான டப்பிங்கும் மிகச் சரியாகப் பொருந்தி உள்ளது. எனவே தமிழ் ரசிகர்களும் படத்தை ஒன்றி பார்க்க முடிகிறது. மாஸ், எமோஷனல், பாலிடிக்ஸ் என வழக்கமாக மிரட்டும் அட்லி ஐந்தாவது படமான ஜவானையும் பிளாக்பஸ்டராக கொடுத்துள்ளார்.

MUST READ