spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஒரே நேரத்தில் பிரபல நடிகர் வீடு மற்றும் உணவகங்களில் ரெய்டு…

ஒரே நேரத்தில் பிரபல நடிகர் வீடு மற்றும் உணவகங்களில் ரெய்டு…

-

- Advertisement -

சென்னையில் நடிகர் ஆர்யா வீடு மற்றும் அவருக்கு செந்தமான உணவகங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.ஒரே நேரத்தில் பிரபல நடிகர் வீடு மற்றும் உணவகங்களில் ரெய்டு…தமிழ் சினிமாவில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் பிரபலமான நடிகர்களில் ஆர்யாவும் ஒருவர். இவர் , கடந்த சில ஆண்டுகளாக பிசினஸில் கவனம் செலுத்தி வருகிறாா். சென்னையில் மட்டுமே 5 இடங்களில் ஆர்யாவுக்கு சொந்தமான 5 உணவகங்கள் இயங்கி வருகிறது. தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் ஆர்யாவின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான SEA SHELL உணவகங்களில் 6 போர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது. சென்னையில் உள்ள அண்ணாநகர், கீழ்ப்பாக்கம், கொட்டிவாக்கம், வேளச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களில் சோதனை நடை பெற்று வருகிறது. வரி ஏய்ப்பு புகாரின் பேரில் சோதனை நடைபெறுவதாக அதிகாரிகள் தகவல்.

அதே நேரம் உணவகங்களை சில ஆண்டுகளுக்கு முன்பு குன்ஹி முசா என்பவருக்கு ஆர்யா விற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி.. உதயநிதி ஸ்டாலின் பகீர்

we-r-hiring

MUST READ