Homeசெய்திகள்சினிமாபிளாஸ்டிக் சர்ஜரியால் வந்த விளைவு... முகம் வீங்கி அடையாளம் மாறிப்போன பிரபல நடிகை...

பிளாஸ்டிக் சர்ஜரியால் வந்த விளைவு… முகம் வீங்கி அடையாளம் மாறிப்போன பிரபல நடிகை…

-

கோலிவுட், டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். விஜய், சூர்யா, கார்த்தி, அஜித், கமல்ஹாசன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து காஜல் அகர்வால் நடித்துள்ளார். அண்மை காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பாக காஜல் அகர்வால் நடிப்பில் ‘கோஸ்டி’ எனும் திரைப்படம் வெளியானது. ஜெய், மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ஜெகன், உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான காமெடி திரைப்படமான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

அதன் பின் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு மொழியில் தனது 60வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சசி கிரண் டிக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அகில் தேகலா என்பவர் இயக்குகிறார். ஸ்ரீ சரண் பகாலா இதற்கு இசையமைக்கிறார். இதைத் தொடர்ந்து காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் சத்யபாமா. அறிமுக இயக்குநர் சுமன் சிக்கலா இப்படத்தை இயக்கி இருக்கிறார். காஜல் அகர்வாலுடன் பிரகாஷ் ராஜா மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கியகதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்நிலையில் சத்யபாமா பட நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, எடுக்கப்பட்ட காஜல் அகர்வாலின் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. குறிப்பாக புகைப்படத்தில் காஜல் அகர்வாலின் முகம் வீங்கி, அடையாளம் தெரியாத அளவு மாறியிருக்கிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு என பதிவிட்டு வருகின்றனர். அவர் செய்து கொண்ட பிளாஸ்டிக் சர்ஜரியால் அவரது முகம் இப்படி மாறியிருக்கலாம் என்றும் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

MUST READ