spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாடல் அழகியுடன் காளிதாஸ் ஜெயராமுக்கு நிச்சயதார்த்தம்

மாடல் அழகியுடன் காளிதாஸ் ஜெயராமுக்கு நிச்சயதார்த்தம்

-

- Advertisement -
ஷங்கர், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தைவான் நாட்டில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இதையடுத்து தென் ஆப்ரிக்காவில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது.

நடிகர் காளிதாஸ் ஜெயராமும் ‘இந்தியன் 2’ படத்தில் இணைந்துள்ளார். விக்ரம் படத்தில் காளிதாஸ், கமல்ஹாசனின் மகனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் இந்தக் கூட்டணி இணைந்துள்ளனர். ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் காளிதாஸ் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாடல் அழகியுமான தாரிணி என்பவரை காதலித்து வந்தார். தாரிணி மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியில் பங்கேற்றவர். இருவருக்கும் தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இதில், இருவரது குடும்பத்தினரும், உறவினர்களும் கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன,.

MUST READ