பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கல்கி 2898AD. இந்த படத்தை இயக்குனர் நாக் அஸ்வின் இயக்க வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்த படத்தில் பிரபாஸுடன் இணைந்து கமல்ஹா சன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மல்டி ஸ்டாரர் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது. அதே சமயம் ஏற்கனவே படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. படமானது டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் 2024 மே 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இதற்கிடையில் நடிகர் பிரபாஸின் கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்டிருந்தனர். அதன்படி பிரபாஸ் இந்த படத்தில் பைரவா எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
#Kalki2898AD – Amitabh Bachan as Ashwathama🌟
Glimpse video looks super grandeur👌pic.twitter.com/m3AzUxSFjp— AmuthaBharathi (@CinemaWithAB) April 21, 2024
பிரபாஸை தொடர்ந்து அமிதாப் பச்சனின் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நடிகர் அமிதாப் பச்சன், அஸ்வத்தமா எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழுவினர் மாஸான டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.