11 நாட்களில் கல்கி 2898AD படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் ஆயிரம் கோடி வசூலைக் கடந்து பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக மாறினார். அதைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள கல்கி 2898AD திரைப்படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸை திணற வைத்து தரமான சம்பவம் செய்து வருகிறார். நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இந்த படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் இதற்கு இசை அமைத்திருந்தார். சயின்ஸ் பிக்சன் மகாபாரத கதையாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. படத்தில் நடிகர் கமல்ஹாசன் வில்லனாக மிரட்டி இருக்கிறார். அதேபோல் அமிதாப் பச்சனும் படத்தை தாங்கி பிடித்துள்ளார். இவ்வாறு மூன்று ஸ்டார் நடிகர்களும் கல்கி 2898AD படத்தை பிரம்மாண்ட வெற்றி பாதைக்கு நகர்த்தி கொண்டு செல்கின்றனர். அந்த வகையில் இந்த படம் முதல் நாளிலேயே 190 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. அதைத்தொடர்ந்து குறுகிய நாட்களிலேயே இந்த படம் 500 கோடியையும் கடந்தது. இந்நிலையில் 11 நாட்களில் 900 கோடியை கடந்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதற்கிடையில் ஆதிபுருஷ், போன்ற தோல்வி படங்களை தந்த பிரபாஸுக்கு சலார் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை தந்தாலும் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை எனலாம். ஆனால் கல்கி 2898AD திரைப்படம் பிரபாஸுக்கு மாஸான கம்பேக் கொடுத்திருக்கிறது. அனேகமாக இன்னும் ஒரே நாளில் இந்த படம் ஆயிரம் கோடியை தாண்டி விடும் என்று நம்பப்படுகிறது.