Homeசெய்திகள்சினிமாதிமுகவுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன்..... எதிர்ப்பு தெரிவிக்கும் திரை பிரபலங்கள்!

திமுகவுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன்….. எதிர்ப்பு தெரிவிக்கும் திரை பிரபலங்கள்!

-

பிரபல நடிகர் கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அதேசமயம் மக்கள் நீதி மய்ய தலைவராகவும் வலம் வருகிறார். மேலும் 2024 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. திமுகவுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன்..... எதிர்ப்பு தெரிவிக்கும் திரை பிரபலங்கள்!இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், நேற்று (09.03.2024) திமுக கட்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதன்படி தி மு க வின் தலைவர் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமலஹாசனுக்கும் இடையே சுமூகமான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவும் முடிவெடுத்துள்ளார் கமல்ஹாசன். மேலும் 2025 இல் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கமலஹாசன் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததை பல திரை பிரபலங்களும் எதிர்த்து வருகின்றனர். கமல்ஹாசன் கட்சி தொடங்கிய போது திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சித்து இருந்தார். ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூரில் போட்டியிட்ட கமல்ஹாசன் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து தற்போது தனித்து களம் காணாமல் திமுகவுடன் கைகோர்த்துள்ளார் எனவும் பலரும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக நடிகை கஸ்தூரி திமுகவுக்கு கமல்ஹாசன் விலை போய் விட்டதாக கூறி கமல்ஹாசனின் என்னடி மீனாட்சி சொன்னது என்னாச்சி என்ற பாடலின் வீடியோவையும் பதிவிட்டு கமல்ஹாசனை கலாய்த்துள்ளார். திமுகவுடன் கூட்டணி அமைத்த கமல்ஹாசன்..... எதிர்ப்பு தெரிவிக்கும் திரை பிரபலங்கள்!பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை வினோதினியும் திமுகவுடன் கமல்ஹாசன் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

MUST READ