Homeசெய்திகள்சினிமாசிம்புவின் 48வது படத்தில் நடிக்கும் கமல்.... லேட்டஸ்ட் அப்டேட்!

சிம்புவின் 48வது படத்தில் நடிக்கும் கமல்…. லேட்டஸ்ட் அப்டேட்!

-

சிம்புவின் 48வது படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவின் 48வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்னும் படத்தை இயக்கியவர்.

STR 48 படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளார். அதாவது ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க இருக்கிறார் என்று சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. அதோடு சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த படம் 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் வரலாற்று படமாக உருவாக இருக்கிறது. இதன் படப்பிடிப்புகள் இந்த ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கமல்ஹாசன் மற்றும் சிம்புவின் கூட்டணி மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தில் இணைய இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

MUST READ