சூர்யா நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப்பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். மேலும் இப்படம் 3D தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக உருவாகி இருக்கிறது. அதன்படி வருகின்ற நவம்பர் 14 (நாளை) தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்கான டிக்கெட் முன் பதிவுகளும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தான் தமிழக அரசு, கங்குவா திரைப்படத்தின் கூடுதல் காட்சிக்கு அனுமதி வழங்கியது.
அதாவது காலை 9 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் ரசிகர்கள் பலரும் படத்தை காண மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் முதல் நாளிலேயே பெரும்பாலான திரையரங்குகள் வேகமாக நிரம்பியுள்ளன. இவ்வாறு டிக்கெட் முன்பதிவில் மாஸ் காட்டும் கங்குவா திரைப்படம் முதல் நாளிலேயே அதிக வசூலை வாரிக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -