Homeசெய்திகள்சினிமாதமிழக அரசிடம் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய 'கங்குவா' படக்குழு!

தமிழக அரசிடம் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய ‘கங்குவா’ படக்குழு!

-

- Advertisement -

சூர்யா நடிப்பில் 3D தொழில்நுட்பத்தில் மிகப்பிரம்மாண்டமாக கங்குவா எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கியிருக்கும் இந்த படத்தினை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்திருக்கிறார். தமிழக அரசிடம் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய 'கங்குவா' படக்குழு!வெற்றி பழனிசாமி இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். சூர்யா, திஷா பதானி, கோவை சரளா பாபி தியோல், யோகி பாபு, நட்டி நடராஜ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர். படமானது வருகின்ற நவம்பர் 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் சிறப்பு காட்சி குறித்த தகவலை படக்குழு பகிர்ந்துள்ளது. அதாவது, மிகவும் எதிர்பார்க்கப்படும் கங்குவா திரைப்படமானது கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட இருப்பதாகவும் தமிழ்நாட்டில் அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரி தமிழக அரசுக்கு மனு அளித்திருப்பதாகவும் தனது சமூக வலைதள பக்கத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்தாலும் தமிழக அரசு அதிகாலை காட்சிக்கு அனுமதி தருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ