Homeசெய்திகள்சினிமாபிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் கார்த்தியின் 'சர்தார் 2'..... விரைவில் பூஜை!

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் கார்த்தியின் ‘சர்தார் 2’….. விரைவில் பூஜை!

-

- Advertisement -

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் கார்த்தியின் 'சர்தார் 2'..... விரைவில் பூஜை!கார்த்தி நடிப்பில் 2022 அக்டோபர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சர்தார். இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இப்படத்தை இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். நாட்டின் நீர் வளத்தை கொள்ளை அடிக்கும் ஒரு பெரிய ப்ராஜெக்ட்டை எதிர்த்து நிற்கும் உளவாளியின் கதையின் பின்னணியில் இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இன்றைய சூழலில் நீர் பிரச்சனை பற்றி கமர்சியலாக எடுத்துக் கூறிய இப்படம் ரசிகர்கள் இடையே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ஏற்கனவே செய்திகள் வெளியாகின. தற்போது சர்தார் 2 படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக உள்ளதாகவும் படத்திற்கான பூஜை வரும் பிப்ரவரி 2 அன்று சென்னையில் தொடங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் கார்த்தியின் 'சர்தார் 2'..... விரைவில் பூஜை!இப்படத்தில் முன்னணி நடிகர்களை வில்லனாக நடிக்க வைக்கவும் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. மேலும் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கார்த்தி தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி 26, மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி 27 ஆகிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் படப்பிடிப்பை நிறைவு செய்து கார்த்தி, சர்தார் 2 படப்பிடிப்பில் இணைவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ