spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா31 இயர்ஸ் ஆஃப் விஜய்.... கத்தி, போக்கிரி திரைப்படங்கள் ரீ ரிலீஸ்...

31 இயர்ஸ் ஆஃப் விஜய்…. கத்தி, போக்கிரி திரைப்படங்கள் ரீ ரிலீஸ்…

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய் அறிமுகமாகி 31 ஆண்டுகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, போக்கிரி, கத்தி உள்ளிட்ட படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளன.

சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக, பல வெற்றிப் படங்களை கொடுத்து பல லட்சம் ரசிகர்களை பெற்றவர் தளபதி விஜய். இரண்டு படம் தோல்வி அடைந்தாளே சினிமாவிலிருந்து காணாமல் போகும் நடிகர்களுக்கு மத்தியில், 31 வருடங்களாக கோலிவுட் எனும் கோட்டையில் தன் கொடியை இறங்காமல் காத்துக் கொண்டிருக்கிறார் நடிகர் விஜய். சிறியதில் தொடங்கி பெரியதில் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் மாபெரும் நட்சத்திரம் நடிகர் விஜய். தமிழ் சினிமாவின் மெர்சல் நாயகன், இன்றுடன் 31 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

நாளைய தீர்ப்பில் வெளியான விஜய்யின் திரை பயணம் லியோ படம் வரை தொடர்ந்து வருகிறது. அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் புதிய படத்தில் நடித்து வருகிறார். தளபதி68 என தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், படத்தில் மீனாட்சி சௌத்ரி, லைலா, சினேகா, பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
we-r-hiring

இந்நிலையில், சென்னையில் உள்ள திரையரங்குகளில் விஜய் நடிப்பில் வெளியாகி மெகா ஹிட் அடித்த கத்தி மற்றும் போக்கிரி திரைப்படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளன. கமலா திரையரங்கில் விஜய் நடித்த போக்கிரி படம் ரி ரிலீஸ் ஆகியுள்ளது. அதேபோல, ரோகிணி திரையரங்கில் கத்தி திரைப்படம் வெளியாகி உள்ளது. திரையரங்கம் சென்ற ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி படத்தை கண்டு ரசிக்கின்றனர்.

MUST READ