Homeசெய்திகள்சினிமாலேடி கெட்டப்பில் கவின்..... வைரலாகும் க்யூட் போட்டோஸ்!

லேடி கெட்டப்பில் கவின்….. வைரலாகும் க்யூட் போட்டோஸ்!

-

- Advertisement -

நடிகர் கவின் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்துக் கொண்டார். லேடி கெட்டப்பில் கவின்..... வைரலாகும் க்யூட் போட்டோஸ்!பின்னர் பல படங்களில் ஹீரோவாக களம் இறங்கி நடித்து வந்த கவினுக்கு லிஃப்ட், டாடா போன்ற திரைப்படங்கள் திருப்புமுனையாக அமைந்தது. குறிப்பாக டாடா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி வருகிறார். அதே சமயம் கவின், பியார் பிரேமா காதல் படத்தில் இயக்குனர் இளன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். லேடி கெட்டப்பில் கவின்..... வைரலாகும் க்யூட் போட்டோஸ்!இந்த படத்திற்கு ஸ்டார் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி அடுத்தடுத்த பாடல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. அதன்படி இந்த படத்தில் இருந்து நேற்று மெலோடி பாடல் ஒன்று வெளியானது. அந்த பாடலில் நடிகர் கவின் லேடி கெட்டப்பில் இருந்தார்.லேடி கெட்டப்பில் கவின்..... வைரலாகும் க்யூட் போட்டோஸ்! சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் லேடி கெட்டப்பில் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் அவரை தொடர்வது நடிகர் கவினும் பெண் வேடத்தில் நடித்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஸ்டார் திரைப்படம் மே 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ