Homeசெய்திகள்சினிமாநடிகர் கவினுக்கு குவியும் பட வாய்ப்புகள்.... அடுத்த படம் யாருடன் தெரியுமா?

நடிகர் கவினுக்கு குவியும் பட வாய்ப்புகள்…. அடுத்த படம் யாருடன் தெரியுமா?

-

நடிகர் கவின் நடித்துவரும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கவின் ‘டாடா’ படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

அந்த வகையில் தற்போது டான்ஸ் மாஸ்டர் சதிஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கிறார். மேலும் இந்த படம் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாக்கி வருகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் இயக்குனரான இளன் இயக்கத்தில் கவின் மற்றொரு படத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ‘ஸ்டார்’ என்ற தலைப்பிடப்பட்டுள்ளதாகவும் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் கவின் இதுவரை 9 நாட்கள் நடித்துள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும் இது தொடர்பான மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ