spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'ரகு தாத்தா' படத்தின் விமர்சனம்!

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரகு தாத்தா’ படத்தின் விமர்சனம்!

-

- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருந்த ரகு தாத்தா திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க சுமன் குமார் இந்த படத்தை எழுதியிருந்தார்.கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'ரகு தாத்தா' படத்தின் விமர்சனம்!பெண்ணியம் பேசும் பெண்ணும், வங்கி ஊழியருமான கீர்த்தி சுரேஷ் இந்தி மொழி திணிப்பை வலுவாக எதிர்க்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு திருமணம் நிச்சயமாகிறது. அந்த திருமணத்தை நிறுத்த ஹிந்தி கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார் கீர்த்தி சுரேஷ். அவர் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை. படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷ் நேர்த்தியான நடிப்பை கொடுத்து கைதட்டல்களை பெறுகிறார்.கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'ரகு தாத்தா' படத்தின் விமர்சனம்! அவரைப் போலவே ரவீந்திர விஜய், எம் எஸ் பாஸ்கர் ஆகியோரும் அவ்வப்போது நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளனர். படத்தின் முதல் பாதி ஓரளவுக்கு ரசிக்கும்படி சென்றது. இரண்டாம் பாதியில் ஆங்காங்கே வரும் காமெடி திரையரங்குகளில் சிரிப்பொலியை எழுப்பியது. குறிப்பாக கிளைமாக்ஸ் இல் வரும் காட்சிகள் நல்ல காமெடி விருந்தாக அமைந்துள்ளன.1969 காலகட்டத்தில் நடக்கும் கதைக்கேற்ப ஒளிப்பதிவையும் மிகச் சிறப்பாக செய்து கொடுத்துள்ளார் ஒளிப்பதிவாளர் யாமினி. குறிப்பாக படத்தின் கலர் எபெக்ட்ஸ் மிகச் சிறப்பாக அமைந்து கண்களுக்கு வண்ணமயமான விருந்து படைக்கின்றது. கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான 'ரகு தாத்தா' படத்தின் விமர்சனம்!இந்த பீல் குட் படத்தில் என்ன மாதிரியான பின்னணி இசை தேவையோ அதை அளவு மீறாமல் செய்து கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன். ஒரு சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகள், நமக்குள் இருக்கும் எதார்த்த சினிமா ரசிகனை சீண்டிப் பார்க்கின்றன. திரைக்கதையிலும், வசனங்களிலும் இன்னும் சற்று மெனக்கெட்டிருந்தால் இப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.

MUST READ