spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகீர்த்தி சுரேஷின் திருமணம் இந்த தேதியில் தான்..... மணமகன் யார் தெரியுமா?

கீர்த்தி சுரேஷின் திருமணம் இந்த தேதியில் தான்….. மணமகன் யார் தெரியுமா?

-

- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தமிழில் விஜய், விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கன தனி ரசிகர்கள் பட்டாளத்தையே சேகரித்து வைத்துள்ளார். கீர்த்தி சுரேஷின் திருமணம் இந்த தேதியில் தான்..... மணமகன் யார் தெரியுமா?மேலும் கதாநாயகி முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் கீர்த்தி சுரேஷ். அடுத்தது இவர் பேபி ஜான், கண்ணி வெடி, ரிவால்வர் ரீட்டா போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதற்கிடையில் நடிகர் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடக்கப் போவதாக பலமுறை சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது. ஆனால் அதற்கு மலையாளத் திரைகளில் பிரபல தயாரிப்பாளரும் கீர்த்தி சுரேஷின் தந்தையுமான சுரேஷ் மறுப்பு தெரிவித்து ஏற்கனவே வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் கடந்த சில தினங்களாக நடிகை கீர்த்தி சுரேஷுக்கு வருகின்ற டிசம்பர் மாதத்தில் கோவாவில் வைத்து திருமணம் நடக்கப்போவதாக பல செய்திகள் உலா வருகின்றனர். வழக்கம்போல் இதுவும் வதந்தியாக இருக்கும் என பலரும் கூறிவந்த நிலையில் தற்போதைய தகவல் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. கீர்த்தி சுரேஷின் திருமணம் இந்த தேதியில் தான்..... மணமகன் யார் தெரியுமா?அதன்படி வருகின்ற டிசம்பர் 11ஆம் தேதி கோவாவில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் நடைபெற இருக்கிறதாம். தனது சிறு வயது நண்பர் ஆண்டனி தட்டில் என்பவரை இவர் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் இரு விட்டாரின் சம்பந்தத்துடன் இவர்களின் திருமணம் நடைபெற இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு கீர்த்தி சுரேஷ் தரப்பில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ