புஷ்பா 2 படத்திலிருந்து வெளியான கிஸ்ஸிக் பாடல் 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் கூட்டணியில் தற்போது புஷ்பா 2 என்று சொல்லப்படும் புஷ்பா தி ரூல் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். வில்லனாக பகத் பாசில் நடித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் படத்திலிருந்து டீசர், ட்ரெய்லர் என அடுத்தடுத்து வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் நேற்று (நவம்பர் 24) இரவு அல்லு அர்ஜுன் மற்றும் ஸ்ரீ லீலா நடனமாடும் கிஸ்ஸிக் எனும் பாடல் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதன்படி இந்த படம் 24 மணி நேரத்திற்குள் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்து வருகிறது. இன்னும் சில மணி நேரத்தில் 26 மில்லியன் பார்வைகளை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.