- Advertisement -
வீரப்பனின் வாழ்க்கையை சொல்லும் கூச முனுசாமி வீரப்பன் தொடரில் இடம்பெறாத காட்சிகள் அனைத்தும், இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

வீரப்பனின் வாழ்க்கையை சொல்லும் ஆவணப் படமாக இந்த தொடர் உருவாகி உள்ளது. பிரபாவதி ஆர்.வி., வசந்த் பாலகிருஷ்ணன், ஜெயச்சந்திர ஹாஷ்மி ஆகியோர் தயாரிப்பில் ஷரத் ஜோதி இயக்கத்தில் வௌியான ஆவணத் தொடர் கூச முனுசாமி வீரப்பன். இதை தீரன் ப்ரொடக்ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். சதீஷ் ரகுநாதன் இந்த தொடருக்கு இசை அமைத்துள்ளார். இந்த தொடர் வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் உருவாக்கப்பட்டு இருந்தது. மேலும், அவர் பேசும் ரியல் காணொலி ஒன்று இந்த தொடரில் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த டிசம்பர் 14-ம் தேதி இத்தொடர் ஜீ தளத்தில் வெளியானது.



