நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். இந்த படத்தின் படப்பிடிப்பு தேனி, பொள்ளாச்சி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நடிகர் தனுஷ், சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருந்தார். அதன்படி ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, மும்பை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதன் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். மும்பை தாராவியை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் தனுஷ் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படமானது எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி ஏற்கனவே இந்த படம் வருகின்ற பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு வெளியாகும் என சமூக வலைதளங்களை செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் தீபாவளி ஸ்பெஷலாக இந்த படத்தில் இருந்து ஏதேனும் ஒரு அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அப்டேட் கிளிம்ப்ஸ் அல்லது ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.