நாளை ஓடிடி யில் வெளியாக இருக்கும் திரைப்படங்கள்.
குலசாமி
நடிகர் விமல் குலசாமி எனும் திரைப்படத்தில் நடிக்க முடித்துள்ளார். இந்த படத்தை குட்டி புலி, சண்டைக்கோழி 2, தேவராட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய சரவணா சக்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். MIK ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் சஞ்சித் சிவா ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து படத்தை தயாரித்து. மேலும் பாடகர் மகாலிங்கம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி வசனம் எழுதியுள்ளார்.
பாலியல் வன்கொடுமைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் கடந்து மே 5ஆம் தேதி திரையில் வெளியானது.
இந்த படம் Tentkotta ஓ டி டி தளத்தில் நாளை ( ஜூன் 30) வெளியாக உள்ளது.
வீரன்
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி.
இவர் வீரன் எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து ஆதிரா ராஜ், வினய் ராய், முனீஸ் காந்த், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மரகத நாணயம் பட இயக்குனர் ஏ ஆர் கே சரவணன் இயக்கியுள்ளார். சத்திய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்துள்ளார்.
இப்படம் ஒரு ஃபேன்சி காமெடி என்டர்டைன்மென்ட் படமாக உருவாகியுள்ளது.
கடந்த ஜூன் 2ஆம் தேதி வெளியான இந்த படம் அமேசான் பிரைம் ஓ டி டி தளத்தில் நாளை ( ஜூன் 30) வெளியாக இருக்கிறது.
விமானம்
சமுத்திரகனி, இயக்குனர் சிவப்பிரகாஷ் என்னலா இயக்கத்தில் விமானம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து மீரா ஜாஸ்மின், அனுசியா பரத்வாஜ், ராகுல் ராமகிருஷ்ணா, தனராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
கே கே ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சரண் அர்ஜுனன் இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் சமுத்திரகனி மாற்றித்திறனாளியாக நடித்துள்ளார். விமானத்தில் சொல்ல வேண்டும் என்று நினைக்கும் ஒரு சிறுவனின் ஆசையை நிறைவேற்ற துடிக்கும் தந்தையின் கதையை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளது. மேலும் இனிமையான குடும்பத்தில் இருக்கும் தந்தை மகனுக்கு இடையேயான பாசப் போராட்டத்தை விளக்கும் படமாக அமைந்துள்ளது.
கடந்த ஜூன் 9ஆம் தேதி வெளியான இந்த படம் நாளை (ஜூன் 30) ஜீ 5 ஓ டி டி தளத்தில் வெளியாக உள்ளது.