spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிரைவில் வருகிறது லானே... தங்கலானே பாடல்..... ஜி.வி. பிரகாஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

விரைவில் வருகிறது லானே… தங்கலானே பாடல்….. ஜி.வி. பிரகாஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவர் தமிழ் ரசிகர்களால் சியான் என்று கொண்டாடப்படுகிறார்.விரைவில் வருகிறது லானே... தங்கலானே பாடல்..... ஜி.வி. பிரகாஷ் கொடுத்த மாஸ் அப்டேட்! இவரது நடிப்பில் தற்போது வீர தீர சூரன் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. அதே சமயம் இவர் பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பார்வதி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து பசுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படமானது வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதன்படி படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தின் டிரைலரும் அதைத் தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் லானே தங்கலானே எனும் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாக இருப்பதாக படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் அப்டேட் கொடுத்துள்ளார். ஏற்கனவே இந்தப் பாடல் வரிகள் டிரைலரில் சில நொடிகள் மட்டுமே இடம் இடம்பெற்றிருந்த நிலையில் இப்பாடலின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ