ரெட்ரோ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
சூர்யாவின் 44வது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். சூர்யாவின் 2D நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. காதல் கலந்த கேங்ஸ்டர் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் படமானது 2025 மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன.
#Retro dubbing has been completed✅ “Cut & Right”😁💥
Super lovely & Creative video from #Suriya🫶♥️pic.twitter.com/p4EDyOGcgJ— AmuthaBharathi (@CinemaWithAB) April 2, 2025
அந்த வகையில் படத்திலிருந்து வெளியான கனிமா பாடல் இணையத்தில் செம டிரண்டாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை படக்குழு இப்படத்தில் இடம்பெறும் கட் & ரைட் எனும் டயலாக்கை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கடந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தாத நிலையில் ரெட்ரோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.