Homeசெய்திகள்சினிமாவிக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்'..... ரிலீஸ் தேதி இதுதானா?

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’….. ரிலீஸ் தேதி இதுதானா?

-

- Advertisement -

விக்ரம் நடிக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்'..... ரிலீஸ் தேதி இதுதானா?

விக்ரம் நடிப்பில் கடந்த ஆண்டு தங்கலான் திரைப்படம் வெளியானது. அடுத்தது இவரது நடிப்பில் உருவாகியுள்ள வீர தீர சூரன் திரைப்படம் 2025 மார்ச் 27ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இவர், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படமானது கடந்த 2017 ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது.விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்'..... ரிலீஸ் தேதி இதுதானா? அதன் பிறகு படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்த நிலையில் பலமுறை இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், துருவ நட்சத்திரம் திரைப்படத்தை 2025 மே 1 திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. விக்ரம் நடித்துள்ள 'துருவ நட்சத்திரம்'..... ரிலீஸ் தேதி இதுதானா? ஏற்கனவே சூர்யாவின் ரெட்ரோ திரைப்படமும் மே 1 அன்றுதான் திரைக்கு வர இருக்கிறது. எனவே ஒரே நாளில் இரண்டு படங்களும் மோத இருக்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் விக்ரம் தவிர ரித்து வர்மா, ராதிகா சரத்குமார், சிம்ரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசையமைக்க மனோஜ் பரமஹம்சா இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ