இயக்குனர் டிஜே ஞானவேல் ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் சில படங்களில் வசனகர்த்தாவாக பணியாற்றி வந்தார். அதன் பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு கூட்டத்தில் ஒருவன் எனும் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இருப்பினும் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ஜெய் பீம் என்ற திரைப்படம் தான் டிஜே ஞானவேலுக்கு ஏராளமான ரசிகர்களை சேகரித்து தந்தது. இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கி வரும் வேட்டையன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் ரஜினி, அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ரஜினியின் 170 வது படமாக உருவாகி வரும் இந்த படத்தில் ரஜினி, போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதனை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். இந்த படமானது வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இயக்குனர் டிஜே ஞானவேல் ரஜினி குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, “வேட்டையன் படத்தில் நீங்கள் புதிய ரஜினிகாந்தை பார்க்கலாம். இந்த படம் மிகவும் சிறப்பாக உருவாகி வருகிறது. ரஜினியின் முள்ளும் மலரும் திரைப்படத்தை நான் 50 முறை பார்த்திருக்கிறேன். அவர் மிகவும் சிறந்த நடிகர். ஒரு தொழிலுக்கு எப்படி நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். அதிகாலை 2 மணி அளவில் படப்பிடிப்பு தளத்தில் இருக்க வேண்டும் என்றால், அவர் அந்த நேரத்தில் அங்கு இருப்பார். அதுவும் இந்த வயதில்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -