Homeசெய்திகள்சினிமாலியோ ஆடியோ லாஞ்ச் விவகாரம் - தயாரிப்பு நிறுவனம் காவல்துறைக்கு பரபரப்பு கடிதம்

லியோ ஆடியோ லாஞ்ச் விவகாரம் – தயாரிப்பு நிறுவனம் காவல்துறைக்கு பரபரப்பு கடிதம்

-

லியோ ஆடியோ லாஞ்ச் விவகாரம் – தயாரிப்பு நிறுவனம் காவல்துறைக்கு பரபரப்பு கடிதம்

லியோ தயாரிப்பு நிறுவனம் லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்க வருத்தம் தெரிவித்து பெரியமேடு காவல்துறை மேற்பார்வையாளர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

Image

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா, கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.மாஸ்டர் படத்துக்கு பின் விஜய், லோகேஷ் கனகராஜ், அனிருத் கூட்டணி 2-வது முறையாக ஒன்று சேர்ந்துள்ளனர். விஜய் பிறந்தநாளில் லியோ படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடலை படக்குழு வெளியிட்டது.

நீண்ட நாட்களாக படத்தின் எந்த அப்டேட்டும் வராத நிலையில், சமீபத்தில் படத்தின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போஸ்டர்கள் வெளியாகின. மேலும் வரும் 30-ம் தேதி லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழுவும் முடிவு செய்திருந்தது. இதற்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செட் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது. இந்நிலையில் யாரும் எதிர்பாராத வேளையில் திடீரென்று தயாரிப்பு நிறுவனம் ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.

விஜய்யின் உண்மை முகம் அதுவா? இதுவா?
லியோ

லியோ தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீனின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள நிறுவனம், அதிகப்படியான பாஸ்’கள் கேட்கப்படுவதலும், பாதுகாப்பை கருத்தில் கொண்டும் லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். ஆனால் இந்த நிகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது பலர் நினைப்பது போல் அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ இல்லை என படக்குழு விளக்கம் அளித்திருந்தது.

இந்நிலையில் வரும் 30ம் தேதி நடைபெறவிருந்த லியோ இசை வெளியீட்டு விழா ரத்தானது தொடர்பாக சென்னை மாநகர போலீசாருக்கு லியோ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் எழுதிய கடிதம் வெளியானது. லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டதற்க வருத்தம் தெரிவித்து பெரியமேடு காவல்துறை மேற்பார்வையாளர் அவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறவிருந்த லியோ ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு கடிதம் கொடுத்த நிலையில், தற்போது பாதுகாப்பு வேண்டாம் என குறிப்பிட்டுள்ளது.

MUST READ