நாளை தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!
குடும்பஸ்தன்
ஜெய் பீம், குட் நைட் லவ்வர் ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் மணிகண்டன். இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் குடும்பஸ்தன் திரைப்படம் நாளை (ஜனவரி 24) திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்த படத்தை ராஜேஷ்வர் காளிசாமி இயக்க சினிமாக்காரன் நிறுவனம் படத்தை தயாரித்து இருக்கிறது. வைஷாக் இதற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்டல் ராதா
ஜோக்கர் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் குரு சோமசுந்தரம். இவரது நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் பாட்டல் ராதா. இந்த படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் தயாரித்திருக்கிறார். தினகரன் சிவலிங்கம் இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் குரு சோமரசுந்தரம் தவிர ஜான் விஜய், சஞ்சனா நடராஜன், மாறன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படம் நாளை (ஜனவரி 24) திரைக்கு வருகிறது.
குழந்தைகள் முன்னேற்றக் கழகம்
செந்தில் மற்றும் யோகி பாபு நடிப்பில் குழந்தைகள் முன்னேற்றக் கழகம் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை கார்த்தியின் சகுனி பட இயக்குனர் சங்கர் தயாள் இயக்கியுள்ளார். இந்த படம் நாளை (ஜனவரி 24) வெளியாக இருக்கிறது.
வல்லான்
வி.ஆர். மணி செய்யோன் இயக்கத்தில் சுந்தர்.சி நடித்திருக்கும் திரைப்படம் தான் வல்லான். இந்த படத்தில் சுந்தர். சியுடன் இணைந்து தலைவாசல் விஜய், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் நாளை (ஜனவரி 24) தமிழகம் எங்கும் வெளியாக இருக்கிறது.
டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்மூட்டி நடித்துள்ள டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. திரில்லர் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் (நாளை) ஜனவரி 24ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.