லோகேஷ் கனகராஜ் தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். டோலிவுட் முதல் பாலிவுட் வரையிலான நடிகர்கள் இவரது இயக்கத்தில் நடிப்பதற்காக காத்திருக்கின்றனர். இவர் மாநகரம், கைதி, விக்ரம் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார்.
இதைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகிறது.
மேலும் லோகேஷ் கனகராஜ், ரஜினியிடம் இந்த படம் சம்பந்தமான கதைகளை விளக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது இந்த தகவல் ஏறத்தாழ உறுதியான நிலையில் இந்தப் படத்தினை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தற்போது செய்திகள் வெளியாகியுள்ளது.

எனினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


